செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாவில் நாட்டேரி, பிரம்மதேசம், தென்னம்பட்டு, பொக்க சமுத்திரம், நாயந்தாங்கல், சிறுநாவல்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
கடந்த நவரை பட்டத்தில் சுமார் 3000 ஏக்கரில் குண்டு ரகமான ஏடிடி 37, சன்னம் ரகமான கோ 51, 10-10, நர்மதா, மகேந்திரா நெல் ரகங்கள் பயிரிடப்பட்டிருந்தன. அறுவடை செய்யப்பட்டு எஞ்சியிருந்த சுமார் 1200 ஏக்கரில், அரை மணி நேரம் பெய்த ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் சேற்றில் உதிர்ந்தன. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.