திருச்சி: திருச்சி மாவட்டம் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்து கும்பகோணம் கோயிலுக்கு 9 பேர் காரில் சென்ற நிலையில் 6 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.