திருவண்ணாமலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது, பொதுமக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போது படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் பலரும் திரண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக் குழுவினர் குவிந்ததால், பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
படப்பிடிப்புக்காக வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டதால், பணியில் இருந்த அதிகாரிகளை தேடி வந்த மக்கள் குழப்பமடைந்தனர்.