தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 13 பேர் உயிரிழந்தனர்.
ஈக்வடாரின் இரண்டாவது பெரிய நகரமான குயாகுவிலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலா நகருக்கு அருகே ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு க் குழுவினர் தெரிவித்தனர்.