பக்கிங்ஹாம் அரண்மனையுடன் மேற்கொண்ட புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹரி- மேகன் தம்பதி இனி வாடகை எதுவும் செலுத்தாமல் ஃபிராக்மோர் மாளிகையில் தங்க அனுமதிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
வாடகை செலுத்த தேவை இல்லை
ஹரி- மேகன் தம்பதி குடியிருக்கும் வகையில் ஃபிராக்மோர் மாளிகையானது பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் புதுப்பிக்கப்பட்டது.
சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்ட நிலையில், குறித்த தொகையை ஹரி- மேகன் தம்பதி திருப்பி செலுத்தியுள்ளனர்.
@jeremy
இதனையடுத்து, இதுவரை ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக செலுத்தி வந்துள்ள ஹரி- மேகன் தம்பதி, இனிமேல் வாடகை ஏதும் செலுத்த தேவை இல்லை என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
5 படுக்கையறைகள் கொண்ட ஃபிராக்மோர் மாளிகையானது ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் முதல் 230,000 பவுண்டுகள் வரையில் வாடகையாக வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த தொகையை ஹரி- மேகன் தம்பதி செலுத்த தேவை இல்லை என அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், ஆண்டுக்கு சுமார் 690,000 பவுண்டுகள் வரையில் ஹரி- மேகன் தம்பதி ஆதாயம் பார்க்க உள்ளனர்.
@PA
அத்துடன், இந்த மாத இறுதியில் குத்தகை ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், அந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் புதுப்பிக்க தேவையில்லை.
இந்த நிலையில், முன்னாள் பிரித்தானிய அமைச்சரவை உறுப்பினரான Norman Baker பக்கிங்ஹாம் அரண்மனையின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மக்களுக்கு செய்யும் துரோகம்
அப்பாவி பிரித்தானிய மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கடுமையாக உழைக்க வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 5 படுக்கையறை கொண்ட ஒரு மாளிகையில் ஹரி- மேகன் தம்பதியை வாடகை ஏதுமின்றி குடியிருக்க அனுமதிப்பது என்பது சாதாரண பிரித்தானிய மக்களுக்கு செய்யும் துரோகம் என அவர் கொந்தளித்துள்ளார்.
மட்டுமின்றி, இதுபோன்ற, சந்தை மதிப்புக்கும் குறைவான வாடகை கட்டணத்தில் ஆடம்பர மாளிகைகளில் குடியிருக்கும் ராஜ குடும்பத்து உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
@AP
2019ல் இருந்தே ஃபிராக்மோர் மாளிகையானது ஹரி- மேகன் தம்பதிக்கு என ஒதுக்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் அவர்கள் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறியிருந்தாலும், தற்போதைய சந்தை மதிப்பிலான வாடகையை தொடர்ந்து செலுத்தி வருவதாக இளவரசர் ஹரி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த வாடகைத் தொகையே புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரண்மனை நிர்வாகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.