திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியின் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுபடி மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையாரின் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில்பாஜக நிர்வாகி கட்டிய இரண்டு மாடி வீட்டை இடித்து, நிலத்தை கோவில் நிர்வாகம் கைப்பற்றியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்திற்கு 23 ஆயிரத்து 800 சதுர அடி அளவில் நிலம் ஒன்று இருந்துள்ளது.
அந்த இடத்தை பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து இரண்டு மாடி கட்டிடம் காட்டியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், அந்த இடத்தை காலி செய்ய பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் பாஜக நிர்வாகி இடத்தை காலி செய்யாததால், காவல்துறை உதவியுடன் கோவில் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.