டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியிடம் விசாரணை செய்ய டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டதாக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ராகுலுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவரிடம் விசாரணை செய்ய டெல்லி போலீசார் வருகை புரிந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அவர்களின் தகவலை ராகுல் காந்தியிடம் கேட்கவே வந்தோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.ஸ்ரீநகரில் ஜன.30ல் இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேசியதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.