பிரித்தானியாவில் வீடு ஒன்றில் நடந்த விருந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் ஆர்ம்லி (Armley) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியின் போது 17 வயது சிறுவன் பலத்த கத்திக் குத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஆர்ம்லி-யின் சாலிஸ்பரி க்ரோவ் பகுதியில் உள்ள பார்ட்டி நடைபெற்ற வீட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக யார்க்ஷயர் ஆம்புலன்ஸ் சேவை அறிவித்ததை தொடர்ந்து, அதிகாலை 2.48 மணியளவில் மேற்கு யார்க்ஷயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
YORKSHIRE LIVE/MEN MEDIA
வீட்டில் ஏராளமானோர் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், அவர்களை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தினார்கள்.
கத்தி குத்தால் பலத்த காயமடைந்த 17 வயது டீன் ஏஜ் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
கொலை விசாரணையை தொடங்கிய பொலிஸார்
இதற்கிடையில் வீட்டு விருந்து குறித்து எதிரே வசிக்கும் நபர் வழங்கிய தகவலில், ”பார்ட்டியின் போது இசை சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருப்பது போன்று தான் தெரிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
YORKSHIRE LIVE/MEN MEDIA
இந்நிலையில் மேற்கு யார்க்ஷயர் காவல்துறை கொலை மற்றும் முக்கிய விசாரணைக் குழுவின் துப்பறியும் நபர்கள் சிறுவனின் மரணத்தை கொலையாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் ஆலன் வீக்ஸ் கூறிய தகவலில், “இதுபோன்ற திடீர் மற்றும் வன்முறை சூழ்நிலைகளில் இளம் உயிர் இழப்பு ஒரு முழுமையான சோகம்,” என குறிப்பிட்டார்.
YORKSHIRE LIVE/MEN MEDIA
மேலும் இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக கருதுகிறோம் மற்றும் காரணமானவர்களை அடையாளம் காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.