பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 – 27’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 273 கற்போர் மையங்களில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு 19.03.2023 இன்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் 5420 கற்போர்கள் தேர்வு எழுதினர்.