கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
சமீபத்தில், ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய அதிபர் புடின் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார். போர் நடந்து வரும் நிலையில், புடின் வந்தது, உளவு பார்ப்பதற்காக இருக்குமோ என்ற எண்ணம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இது புடினின் ராஜ தந்திரம் என்றும் பேசப்படுகிறது.
இது குறித்து ரஷ்ய ஊடகங்களின் தகவலின் படி, நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக, புடின் அங்கு சென்றார் என்றும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement