திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்த நிலையில், கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சுப்ரமணி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவன் தனக்கு சொந்தமான நிலத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயர மனைவி ஈஸ்வரியின் சிலை வடித்துள்ளார்.
மேலும் அதனை கோவிலாகவும் கட்டியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். மேலும் சுப்ரமணி தனது மனைவி மீது வைத்துள்ள அன்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே வரும் மார்ச் 31ம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 500 பெண்களுக்கே இலவச சேலையும் அன்னதானமும் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.