ஜெய்ப்பூர்: நாட்டில் மாட்டு சாணம் பொதுவாகவே உரமாக மற்றும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பீம்ராஜ் சர்மா மாட்டு சாணத்தில் இருந்து காகிதம், கவர், ராக்கி கயிறு, ஹோலி மற்றும் தீபாவளி பொருட்கள், பென்சில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். இவரது நிறுவனத்தின் டைரிகள், பெட்டிகள், பென்சில்கள் மற்றும் ராக்கி உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
தனது தொழில் குறித்து பேசிய பீம்ராஜ், ‘’இதரப் பொருட்களுடன் 40% மாட்டு சாணம் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படுகிறது. 600 கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 3,000 காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாட்டு சாணத்தில் இருந்து காகிதங்கள் தயாரிக்கப்படுவதால் சூற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தார்.