'வண்டலூரில் ஒரு வேலை இருக்கு'.. செல்லூர் ராஜூவை மோசமாக கிண்டலடித்த திருச்சி சூர்யா..!

அதிமுக ஆட்சியில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமைச்சர்களில் பெறுவர் செல்லூர் ராஜு. தெர்மாகோல் விவகாரத்தால் அதிகம் விமர்சிக்கப்பட்ட செல்லூர் ராஜு தற்போது புலி வாலை பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

கோடை காலத்தையொட்டி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செல்லூர் ராஜு அங்கு புலிவாலை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதற்கும் நெட்டிசன்கள் பலர் இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா செல்லூர் ராஜூவை இரட்டை அர்த்தத்துடன் விமர்சித்திருப்பது அதிமுகவினரை கடுப்பேற்றியுள்ளது.

திருச்சி சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட்டில் ” நகைச்சுவைக்கு ஒரு வார்த்தை சொல்லுவார்கள் வண்டலூரில் ஒரு வேலை உள்ளது என அதை கரெக்டாக செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள், ”இது தான் கூட்டணி கட்சி தலைவர்களை, நீங்கள் மதிக்க சொல்லி கற்றுக்கொடுத்த லட்சனமா?” என அவரை சாடியுள்ளனர்.

திருச்சி சூர்யா பாஜகவை விட்டு விலகியிருந்தாலும் அண்ணாமலைக்கு விசுவாசம் காட்டி வருகிறார். அண்ணாமலையை பற்றி யாராவது விமர்சனம் செய்தால் உடனே அவர்களை எந்த அளவுக்கும் சென்று பதிலடி கொடுத்து வருகிறார். நடிகை காயத்ரி ரகுராம் எப்போதெல்லாம் அண்ணாமலையை விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் திருச்சி சூர்யா ஒருமையிலும்,இரட்டை அர்த்த வார்த்தைகளாலும் சாடி வருகிறார்.

அண்மையில் ஓடும் விமானத்தில் அவசரகால கதவை திறந்த பாஜக எம்பி தேஜஸ்வியை விமர்சித்து காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டார். அதில், ”ஒரு பைத்தியம் அல்லது பயங்கரவாதி மட்டுமே மற்ற பயணிகளின் உயிரை பணையவைத்து ஓடும் விமானத்தின் கதவைத் திறப்பார்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு திருச்சி சூர்யா ” கதவு நாளே உனக்கு ஏமா பிரச்சனையா இருக்குது. கண்ணாடி கதவு போட்டாலும் பிரச்சனை கதவை திறந்தாலும் பிரச்சனை கொஞ்சம் உன் கதவை நீ மூடிகிட்டு இருந்தா தான் என்ன. ஏதோ விமான போக்குவரத்து துறை அமைச்சர் என்று நினைப்பு” என்று சர்ச்சையாக ட்வீட் பதிலடி கொடுத்தார்.

அதேபோல, தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை வந்த பிறகு வார்ரூம் அமைத்து ஹனிட்ராப் மூலம் பணம் மோசடி செய்யும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த திருச்சி சூர்யா ”உனக்கு வார்ரும் நாளும் பிரச்சனை துபாய் ரூம் நாளும் பிரச்சனை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி” என்று இப்படி பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள போட்டோவுக்கு ” வண்டலூரில் ஒரு வேலை உள்ளது என அதை கரெக்டாக செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று திருச்சி சூர்யா வம்பிழுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.