வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ வெளியீடு
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரின் மேக்கிங் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் வந்தியதேவன் காஸ்டியூம் அணிந்து அந்த லொகேஷனில் ஒரு சீனில் நடித்து விட்டாலே நாம் அந்த கதையுடன் ஒன்றி விடுவோம் என்று கார்த்தி கூறியுள்ளார். அது மட்டுமின்றி வந்தியத்தேவன் கேரக்டருக்கான காஸ்ட்யூம் உட்பட அனைத்து ஏற்பாடுகளை செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.