பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஏப்ரல் மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
ஏப்ரல் 1, 2023 – சனிக்கிழமை – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
ஏப்ரல் 2, 2023 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4, 2023 – செவ்வாய்க்கிழமை – மாகவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5, 2023 – புதன்கிழமை – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் (ஐதராபாத்)
ஏப்ரல் 7, 2023 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
ஏப்ரல் 8, 2023 – சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை
ஏப்ரல் 9, 2023 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14, 2023 – வெள்ளிக்கிழமை – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீரோபா / பைசாகி / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா
ஏப்ரல் 15, 2023 – சனிக்கிழமை – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்
ஏப்ரல் 16, 2023 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 18, 2023 – செவ்வாய்க்கிழமை – ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21, 2023 – வெள்ளிக்கிழமை – ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்) / கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா
ஏப்ரல் 22, 2023 – சனிக்கிழமை – 4வது சனிக்கிழமை மற்றும் ரமலான் ஈத் (இத்-உல்-பித்ர்)
ஏப்ரல் 23, 2023 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30, 2023 – ஞாயிற்றுக்கிழமை