வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. ‛நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் குறிப்பாக 'கெடைச்சத இழக்குறதும், இழந்தது கெடைக்குறதும்' எனும் வரிகளை வைத்திருக்கிறார்.
அஜித்குமார் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் விக்னேஷ் சிவன் இந்த சோகமான பாடல் வரிகளை வைத்திருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.