13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் சந்தோஷ் குமார் (26). இவரிடம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து சந்தோஷ் குமார், சிறுமியை பயிற்சி முடிந்து தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
இந்நிலையில், ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பதற்காக சந்தோஷ் குமார் சிறுமியை ரயிலில் நாக்பூருக்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு, அங்கு சந்தோஷ்குமார் தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கும் போதும், வீட்டிலும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்த அறிந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சடைந்து இதுகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.