விசாகப்பட்டினம்: ஆஸி., அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணி துவக்க வீரர் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுக்கும், சூர்யாகுமார் யாதவ் 0 ரன்னுக்கும் அவுட்டாகினர். கேஎல் ராகுல் 9 ரன், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுக்கும், குல்தீப் யாதவ் 4, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 31, அக்சர் படேல் 29, ரவிந்திர ஜடேஜா 16 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்திய அணியின் ஆட்டம் 26 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்த நிலையில் முடிவுக்கு வந்தது.
ஆஸி., அணியின் மிச்சல் ஸ்டார்க் 5, அபோட் 3 , நாதன் எலியஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement