புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு தீவிரவாத செயல் 70% குறைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நான் சென்றுள்ளேன். அங்குள்ள நிலைமையை பார்க்கும் போது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமராவார். இவ்வாறு அமித் ஷா பேசினார்.