அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதற்காக தான் தாடி, மீசை எல்லாம் வளர்த்திருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். அவர் தனுஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாரி செவ்ராஜுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணப் போகிறாராம் தனுஷ்.
அந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவன தயாரிப்பில் கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தனுஷ் இப்படி ஒரு முடிவு செய்திருக்கிறாராம். மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்.
Dhanush, Meena:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்
முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்தார் தனுஷ். கடந்த 2020ம் ஆண்டு வெளியான கர்ணன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்தே அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
தனுஷுக்கு நல்ல காலம் இது. அதனால் தான் அடுத்தடுத்து நல்ல விஷயங்களாக நடக்கிறது. எங்களுக்கு இது போதும். இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் மீண்டும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள்.
Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்
மாமன்னன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் மாரி செல்வராஜ். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அந்த படத்தை அடுத்து த்ருவ் விக்ரமை வைத்து ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். த்ருவ் விக்ரம் படத்தை முடித்த பிறகே தனுஷை இயக்குவாராம்.
கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்த பிறகு டோலிவுட் பிரபலமான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படம் மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவிருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
டி50 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயனுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் தனுஷ். அது கேங்ஸ்டர் டிராமா படமாம்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்த வாத்தி படம் ரிலீஸான ஒரு மாதத்தில் உலக அளவில் ரூ. 118 கோடி வசூல் செய்துள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாத்தி படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் ரிலீஸானது.
வாத்தியை விட சார் அதிகம் வசூல் செய்தது. தெலுங்கானா, ஆந்திராவில் சார் படம் வசூல் வேட்டை நடத்தியது. தனுஷின் நடிப்பை பார்த்து அக்கட தேசத்து ரசிகர்கள் அசந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.