விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார்.
இதன் பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயக்கி வருகின்றார்.
Leo: லியோ படப்பிடிப்பில் நடப்பதெல்லாம் பார்த்த சந்தேகமா இருக்கே..குழப்பத்தில் ரசிகர்கள்..!
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ, போஸ்டர்கள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்தது. இதையடுத்து இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகப்போவதாக வந்த அறிவிப்பின் அடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் லியோ படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மாதம் காஷ்மீரில் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் கடுமையான குளிரிலும் லோகேஷ் கனகராஜ் சொன்ன தேதிக்கு முன்னேற படப்பிடிப்பை முடிக்கவுள்ளாராம்.
இதையடுத்து சென்னையில் லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம். இதில் விஜய் உட்பட அர்ஜுன், சஞ்சய் தத்,மன்சூர் அலி கான் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை நடிகர்கள் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனின் பகுதி நிறைவு பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் சஞ்சய் தத்தின் காஷ்மீர் பகுதி நிறைவடைந்ததாகவும், இதன் பிறகு சென்னையில் நடக்கவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து லியோ போன்ற ஒரு மிகப்பிரமாண்டமான படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் சொன்ன தேதியில் முடித்துள்ளதால் ஒட்டுமொத்த திரையுலகமே லோகேஷை வியப்பாக பார்த்து வருகின்றது.
மேலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். படத்தின் பூஜை துவங்கும் முன்பே லியோ பலகோடிக்கு வியாபாரமானால் தயாரிப்பாளருக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன.