குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் விஜய். வளர்ந்த பிறகு அவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். முதல் சில வருடங்கள் அப்பாவின் உதவியால் நிலைத்து நின்ற விஜய் அதன் பிறகு தன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்தார்.
தன் கடின உழைப்பால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆனார். அந்த இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் விஜய் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அதை பார்த்த விஜய் ரசிகர்கள், வாவ், செம என்றும், மற்றவர்கள் கிண்டல் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
மேலும் விஜய் விக் வைத்து நடிப்பது பற்றியும் விமர்சிக்கிறார்கள். படங்களில் விஜய் விக் வைத்து நடிப்பது உண்மை தான். ஆனால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கதாபாத்திரத்திற்கு ஏற்ப அடிக்கடி முடியை மாற்றி அமைப்பது சாத்தியம் இல்லை. ஒரே படத்தில் பல வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் எல்லாம் வருவதால் தலைமுடி பிரச்சனை ஏற்படும். அதை தவிர்க்கவே ஒவ்வொரு கெட்டப்புக்கும் விக் வைக்கிறார் விஜய்.
Ajith: மவனே, அஜித் பத்தி இன்னொரு வார்த்தை சொன்ன, அவ்ளோ தான்: விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை
வெவ்வேறு கெட்டப்புகளில் ரசிகர்களை மகிழ்விக்கவே அவர் விக் வைத்து நடிக்கிறார். நிஜத்தில் அல்ல. இந்நிலையில் தான் விஜய்யை விக் வைத்து நடிப்பதற்காக கிண்டல் செய்பவர்களை ரசிகர்கள் விளாசுகிறார்கள்.
48 வயதிலும் ஸ்லிம்மாகவும், தலைநிறைய முடியுடனும் பார்க்க டீனேஜ் பையன் போன்று இருக்கிறார் எங்கள் தளபதி. படங்களில் பார்ப்பதை விட நிஜத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். இதை அவரை நேரில் பார்த்த பிரபலங்கள் பலரே தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது படத்திற்காக விக் வைப்பதை பெரிதாக பேசுவது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
வேட்டைக்காரன் படத்தில் இருந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக விக் பயன்படுத்தி வருகிறார் விஜய். ஒரு நடிகராக அவர் செய்யும் முயற்சி இது. இதை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என மேலும் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.
Leo Vijay: ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூலித்த லியோ: விஜய் படம் புது சாதனை
இந்நிலையில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் இசை, சாட்டிலைட், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமங்கள் ரூ. 400 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தன் பிறந்தநாளில் விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் விஜய் ரொம்ப க்யூட்டாக இருந்தார்.
லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. மார்ச் 24ம் தேதியுடன் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகிறார் த்ரிஷா. அவரை முதல் காட்சியிலேயே வில்லன்கள் கொலை செய்துவிடுவார்கள். அதற்காக விஜய் பழிவாங்குவது தான் கதை என ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக கூறி வருகிறார்கள்.
லியோவில் விஜய்யின் மனைவியாக நடிக்கிறாராம் த்ரிஷா. அவர்களின் மகளாக பிக் பாஸ் 6 நிகழ்ச்சி புகழ் ஜனனி நடிக்கிறாராம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடனேயே விஜய்க்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு, ஜனனி கொடுத்து வச்சவர் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.