நாட்டின் அத்தியாவசிய துறைகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலப் பகுதியில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக சில மாற்றங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் அமெரிக்க டொலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சிலர் குற்றஞ்சாட்ட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் டொலர் தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இவ்வாரம் மிகவும் முக்கியமானதாக அமையும். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க உள்ள கடன் தொடர்பிலான அங்கீகாரம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.