அதிதி ஷங்கரின் அடுத்த படம்
கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி. முதல்படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது. அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் படத்தில் நிருபர் வேடத்தில் அதிதி நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த படத்தை தொடர்ந்து அவர் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திலும் நாயகியாக இணைய உள்ளாராம். இப்படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார்.
சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை தான் ஆகாஷ் முரளி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.