வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்பிரான்சிஸ்கோ: பிரிட்டன் தலைநகர் லண்டனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாளுடன் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
காலிஸ்தான்’ என்ற பெயரில், சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்திய, காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் மதத் தீவிரவாத பிரசாரகர் அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய, பஞ்சாப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்குள் வாளுடன் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித்பாலை விடுதலை செய் என்ற கோஷத்துடன் அலுவலகத்தில் இருந்து இந்திய தேசியக்கொடியை பறித்து வீசினர். அங்கு பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளை மிரட்டிதாக்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement