அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை ராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
நீடிக்கும் பதற்றம்
சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது ”ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது, அத்துடன் Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) கொரிய தீபகற்ப கடல் பிராந்தியத்தில் ஏவி எச்சரிக்கை விடுத்தது.
KCNA
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் 800,000 பொதுமக்கள் வட கொரிய ராணுவத்தில் சேர கையொப்பமிட்டதாக KCNA அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டு இருந்தது.
மூன்றே நாளில்..!
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக ஆயுதமேந்த சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் அந்த நாட்டு ராணுவத்தில் இணைத்து இருப்பதாக வட கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
KCNA
கிம் ஜாங் உன் தலைமையிலான அரசாங்கம் தனது குடிமக்களை போராட ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் மிகப்பெரிய இராணுவ கையொப்ப இயக்கங்களை அமைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பானது வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனமான KCNA, இன்று(மார்ச் 20) வெளியிட்டுள்ள தகவலில், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் கொண்ட இளைஞர்கள், எதிரிகளுக்கு இரக்கமற்ற தண்டனையை வழங்க உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
KCNA