முன்னோர்கள் ஆரத்தி எடுப்பது கண் திருஷ்டி கழிக்க ஏற்படுத்தியது. அக்காலத்தில் யாரும் காரணம் கேட்க மாட்டார்கள். அறிவியல் என்பதே கண்டறியாத சமயத்து வழக்கம்.
இப்போது எல்லாவற்றிற்க்கும் அறிவியல் விளக்கம் கேட்கும் காலம். அதற்கு ஏற்ப இந்த பதில். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்களை நாம் இப்போது தான் அறிய ஆரம்பித்துள்ளோம். அது ஒரு கிருமிநாசினி. அதுபோல சுண்ணாம்பும். அதில் எறியும் சூடமும் ஒரு ரசாயனம். இவை மூன்றும் கலந்து செயல்படுவது எதிரில் உள்ளவர்களை தூய்மை படுத்தும்.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இப்போது கொரோனா காலத்தில் எப்படி வீட்டுக்கு வந்தவுடன் கையை சுத்தம் செய்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வழி செய்கிறோமோ, அதுபோல அந்த காலத்திலிருந்து ஆரத்தி எடுப்பது என கொள்ளவும்.
அறிவியல் பூர்வமான காரணங்கள்
மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிங்கள் அதிகம் அண்டியிருக்கும்.
இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். உடல் மேல் கிருமிகள் அண்டியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இது அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.
அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.