இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், இருந்த 6 இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் படகை இன்று தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலோர காவல் குழு அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளனர். பின்னர் மேல் விசாரணை செய்த பிறகு அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM