சென்னை: ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் 80,000 ஹெக்டேரில் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் 18-வது வனவிலங்கு சரணாலயமாக இது இருக்கும். விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.