ஈரோடு: ஈரோட்டில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த மின்வாரிய ஊழியரை கைது செய்தனர். 25 பேரிடம் ரூ.1.25 கோடி பெற்று மோசடி செய்த பவானி சிங்கம்பேட்டையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மூர்த்தியை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மூர்த்தியை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.