`ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று; உடல்நலம் தேறிவருகிறார்' – மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்குப் பின்னர், அந்த தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்ட இளங்கோவன், மார்ச் 15-ம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை

அந்த அறிக்கையில், “மார்ச் 15-ம் தேதி மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல்நலம் தேறிவருகிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.