பொதுவாக நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
நாம் இதற்கு தீர்வாக தேடி செல்வது ஹேர் டையை தான். இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது.
ஆனால், ஒரு சில வீட்டு வைத்தியத்தை செய்வதாலும் நம்மால் இந்த நரைத்த முடிக்கு நிரந்தர தீர்வை பெற முடிகிறது தற்போது சிலவற்றை இங்கே பார்ப்போம்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு கையளவு வெந்தயத்தை போட்டு நன்கு கலக்கவும். பிறகு, அந்த நீரை கொதிக்க வைத்து ஆற விடவும். வெந்தய நீர் நன்கு ஆறியதும், அந்த நீரைப் பயன்படுத்தி தலையை அலசவும். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை வெறும் தண்ணீரில் அலசிடவும்.
-
முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். தயார் செய்த சாற்றை கூந்தலில் தடவி, 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து அலசிடவும். மேலும், காயங்கள் இருக்கும் இடத்தில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- பாதாம், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, நெல்லிக்காய் மற்றும் வெந்தய பொடியுடன் சேர்த்து கலந்து, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, ஓர் நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். முதல் நாள் இரவில் தடவி மறுநாள் காலையில் கூந்தலை அலசிடவும்.
- கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, நன்கு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவினால், உங்கள் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவது மட்டுமின்றி, இளநரை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.