உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசையில் பின்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது, இந்தியா 126 வது இடத்தில் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடு
சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படும் மார்ச் 20ம் திகதி (திங்கட்கிழமை) UN நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் என்ற அமைப்பு “உலக மகிழ்ச்சி அறிக்கை” என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருந்தது.
150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மகிழ்ச்சி அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் குறைந்த ஊழல் ஆகிய அளவிட்டு காரணிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் காரணமாக பின்லாந்து தொடர்ந்து ஆறாவது ஆண்டாக விரும்பத்தக்க பரிசை வென்றுள்ளது.
மேலும் கடந்தாண்டு தரவரிசைகளை போலவே, இந்த ஆண்டும் பட்டியல் நார்டிக் நாடுகள் பல முதல் இடங்களை பிடித்துள்ளது, அந்த வகையில் டென்மார்க் 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3 வது இடத்திலும் உள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர்களில் ஒருவரான ஜான் ஹெல்லிவெல் வழங்கிய தகவலில், “மற்றவர்களுக்கு நன்மை செய்வது, குறிப்பாக அந்நியர்களுக்கு உதவுவது, 2021 இல் வியத்தகு முறையில் உயர்ந்தது, அதைபோல 2022 இல் மேலும் உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா, தரவரிசையில் நேபாளம், சீனா, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு ஆகிய நாடுகளுக்கு பின் 126 வது இடத்தில் உள்ளது. பிரித்தானியா 17வது இடத்தில் உள்ளது.
போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யா உக்ரைன் ஆகிய இருநாடுகளும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பின்னடைவை சந்தித்துள்ளனர், இருப்பினும் சுவாரஸ்யமாக இந்த ஆண்டு ரஷ்யா 72 வது இடத்திலும், உக்ரைன் 92 வது இடத்திலும் உள்ளது.