சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.100 கோடியில் நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.