ஆந்திர பிரதேசத்தில் மேலவையில் உள்ள பட்டதாரி தொகுதிகளுக்கு நடைபெற்ற மூன்று தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இது மக்களின் வெற்றி. தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தன் மூலம் பொதுமக்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.
மேலும் எதிர்த்து பேசினால் உடனே கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசை தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.