டெல்லி: ஒன்றிய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள முதுகலை படிப்பில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் ஏப்.19-ம் தேதி மாலை 5 மணி வரை cuet.nta.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.