கடலூர்: கடலூர் மாவட்டம் கோ.மங்கலத்தில் கனமழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 50,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் அவ்வபோது மழை பெய்து வந்த நிலையில், விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி, கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அறுவடை முடிந்து நெல் விற்பனை செய்யும் நேரத்தில் கோடைமழை பெய்து நெல்மூட்டைகள் பாதிக்கப்படுவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் விருத்தாச்சலம் அருகே உள்ள கோ.மங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 50,000 நெல் மூட்டைகள் சேதமடைந்தன. ஈரப்பதம் அதிகமாகிவிட்டால் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.