கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோட்டை அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 10ஆம் வகுப்பு வரை படித்த சிறுமி, அதன்பின் அதே பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், பழவிளை பகுதியைச் சேர்ந்த பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிசாந்த்(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற ஸ்ரீநிசாந்த் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீநிசாந்தை கைது செய்தனர். மேலும் ஸ்ரீநிசாந்துக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் அய்யப்பன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.