சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து


சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

 

சீனா மீது ரஷ்யாவிற்கு பொறாமை

உக்ரைனுடனான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைந்து இருக்கும் நிலையில், போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் போர் குற்றங்களை நிகழ்த்தியதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்-டை பிறப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, திங்களன்று  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு வந்தடைந்துள்ளார்.

சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து | Putin Says Russia Is Jealous Of China Peace PlanVGTRK

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் முறைசாரா பேச்சுவார்த்தையில் பேசிய ஜனாதிபதி புடின், சமீபத்திய தசாப்தங்களில் சீனாவின் விரைவான வளர்ச்சியை கண்டு ரஷ்யா “சற்று பொறாமை கொண்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் “கடந்த ஆண்டுகளில், சீனா அதன் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அவை நலன்களை ஏற்படுத்துகிறது மற்றும் இதனால் நாங்கள் சீனாவின் மீது பொறாமைப்படுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், உக்ரைனில் கடுமையான நெருக்கடியை தீர்க்க சீனாவின் திட்டத்தை விளாடிமிர் புடின் வரவேற்றுள்ளார்.

சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து | Putin Says Russia Is Jealous Of China Peace PlanKremlin Press Service

அதில் தீர்மானத்திற்கான தனது முன்மொழிகளைப் பார்த்ததாகவும், அவற்றை மரியாதையுடன் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புடின் பொதுமக்கள் ஆதரவை பெறுவார்

புடின் கருத்துகளுக்கு பதிலளித்த சீன ஜனாதிபதி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ரஷ்ய பொதுமக்களின் புடின் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

அதேசமயம் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் செழிப்பை அடைவதில் ரஷ்யா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து | Putin Says Russia Is Jealous Of China Peace Plan



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.