சென்னை: சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் எனவும் அமஸிஹா கூறினார்.