ஜேர்மனியின் ஃப்ரூடன்பெர்க் பகுதியில் இரு பாடசாலை மாணவிகளால் 12 வயது சக மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பதறவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
நகங்களை சீராக்கும் கூரான பொருள்
லூயிஸ் என மட்டும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த 12 வயது சிறுமி நகங்களை சீராக்கும் கூரான பொருளால் 32 முறை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலை அடுத்து, குற்றுயிராக விட்டுவிட்டு அந்த மாணவிகள் இருவரும் மாயமாகியுள்ளனர்.
@reuters
மார்ச் 11ம் திகதி சிறுமி லூயிஸ் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் மார்ச் 12ம் திகதி தீவிர தேடுதல் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
ட்ரோன் விமானம், மோப்ப நாய்கள் மற்றும் ஹெலிகொப்டர் உட்பட அனைத்து வாய்ப்புகளையும் அதிகாரிகள் தரப்பு பயன்படுத்தியுள்ளது.
இதனிடையே, சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மூவரும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பறையில் பயிலும் மாணவிகள் எம்னவும், 13 வயது மாணவியுடன் தான் லூயிஸ் பேருந்தில் சென்று வருவது வழக்கம் எனவும் தெரியவந்துள்ளது.
Credit: Newsflash
சிறுமிகள் இருவரும் முன்னெடுத்துள்ள இந்த கொடூர தாக்குதல் சம்பவம், விசாரணை அதிகாரிகளையே மொத்தமாக நடுங்க வைத்துள்ளது.
நகங்களை சீராக்கும் கூரான பொருளால் லூயிஸ் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
ஒப்புதல் வாக்குமூலம்
பின்னர் உடல் உறையும் குளிரில் குற்றுயிராக விட்டுவிட்டு இரு சிறுமிகளும் மாயமாகியுள்ளனர்.
மட்டுமின்றி, லூயிஸின் தலையை பிளாஸ்டிக் பை ஒன்றால் மூடி, கல்லால் தாக்கவும் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், தற்போது அந்த சிறுமிகள் இருவரும் சிறார் சீர்த்திருத்த அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
14 வயது நிரம்பிய குற்றவாளிகளை மட்டுமே ஜேர்மனியில் சிறைக் காவலில் வைக்க சட்டம் அனுமதிக்கிறது.
Credit: Handout
காயங்களால் ஏற்பட்ட இரத்த இழப்பால் லூயிஸ் பரிதாபமாக இறந்தார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்திற்கு பின்னர் அந்த சிறுமிகள் லூயிஸின் பெற்றோருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு, லூயிஸ் தொடர்பில் கதை கட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, இரு சிறுமிகளும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் முன்னர், இருவேறு சம்பவங்களை பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லூயிஸ் கொல்லப்பட்டதன் நோக்கம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.