வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இன்று (20 ம் தேதி) தலைநகர் புதுடில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 11 மாநில லட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ்பெறக் கோரி, சமீபத்தில் விவசாயிகள் டில்லியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இன்று (20 ம் தேதி) தலைநகர் புதுடில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 11 மாநில லட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement