தப்பியோடியதாக கூறப்படும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங், பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத்தின் சட்ட ஆலோசகர் இமான் சிங் கூறி உள்ளார்.
பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஷாகோட் காவல் நிலைய போலீசாரால் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகவும், அம்ரித்பால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், போலி என்கவுண்டரில் அவரை சுட்டுக் கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாவும் வழக்கறிஞர் இமான் சிங் குற்றம்சாட்டினார்.