தமிழக பட்ஜெட் 2023: ஒன்றிய அரசை விட தமிழகம் நிதி மேலாண்மையில் சிறப்பா இருக்கு – பிடிஆர் போட்ட வெடி

பட்ஜெட் தாக்கல்

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் 2023 -24-க்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு சரியாக அறிமுக உரையை வாசிக்க தொடங்கிய அவர், பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழியில் சமூகநீதி பாதையில் தமிழகம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்க முன்னோடிகளின் வழிகாட்டுதலின்படி திராவிட மாடல் ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சர் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்தால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது. முதலமைச்சருக்கு நன்றி. 

நிதித்துறை சீர்த்திருத்தம்

கடுமையான நிதி நெருக்கடியான காலங்களிலும் தமிழக அரசு பல்வேறு சீர்த்திருந்தங்களை நிதித்துறையில் மேற்கொண்டிருக்கிறது. அதனால், வருவாய் பற்றாக்குறையை 62 ஆயிரம் கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசை ஒப்பிடும்போது தமிழகத்தின் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது, மேலும் வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசை கணிசமாக தமிழகம் குறைத்திருக்கிறது.

அம்பேத்கர் புத்தகங்கள் தமிழில்

இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் அமைக்கபடும். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கலைஞர் நூலகம் திறப்பு விழா தேதி

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.