தமிழ்நாடு பட்ஜெட் 2023: சென்னைக்கு சூப்பர் திட்டங்கள் – வேற லெவலில் வரப் போகும் மாற்றம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இல் சென்னையை மையமாக வைத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வட சென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய், சைதை – தேனாம்பேட்டை மேம்பாலம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்பு பெற்று வருகின்றன.

தமிழக அரசால் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. 1315 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் காலங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும், நீர் வழிப் பாதைகள் தூர்வாரும் பணிகளுக்கும் 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சீரான சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.

சென்னைத் தீவுத் திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ 621 கோடி ரூபாய் செலவில் 4 வழித்தட மேம்பாலம் கட்டப்படும்.

சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணி மனைகள் ரூ 1200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.

ரூ.1500 கோடி மதிப்பீட்டில் அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் பொதுக் கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள் இயங்கி வரும் கழிப்பறைகளை சீரமைத்தல் மற்றும் அதன் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு, தனியார் பங்களிப்புடன் ஒரு முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தின் பிற மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.