சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம், சோழ பேரரசு புகழை அறிய தஞ்சை மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், நிதியமைச்சர் பட்ஜெட் வாசித்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் கருத்து, கூச்சல் குழப்பம் அவைக்குறிப்பில் ஏறாது என சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. கடந்த […]