தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக அமைச்சர் வெளியிட்டதால், வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
மத்திய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில். தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
சொன்னதைச் செய்தார்
முதல்வர்
உரிமைத்தொகை
அறிவித்துவிட்டார்சுயமரியாதையின்
மறுபெயர் பணம்
சுதந்திரத்தின்
மறுபெயர் பணம்ஒரே அறிவிப்பில்
பெண்களின்
சுதந்திரம் சுயமரியாதை
இரண்டுக்கும்
பெருமை சேர்த்திருக்கிறார்வாழ்த்துவோம் முதல்வரை
போகப் போக இதை
இந்தியா பின்பற்றும்@CMOTamilnadu— வைரமுத்து (@Vairamuthu) March 20, 2023
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ‘சொன்னதைச் செய்தார் முதல்வர் உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம் சுதந்திரத்தின் மறுபெயர் பணம். ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் தமிழ்நாடு முதல்வரை போகப் போக இதை இந்தியா பின்பற்றும்’ என பதிவிட்டுள்ளார்.