கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்றிரவு பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளன.
கொட்டாரம் கிராமத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திடீர் மழையின் காரணமாக நந்தம்பாடி, கொத்தட்டை உள்ளிட்ட 5 திறந்தவெளி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.