நைரோபி-கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, நகர நிர்வாகங்களுக்கு, அந்நாட்டின் துணை ஜனாதிபதி ரிகாதி கச்சகுவா உத்தரவிட்டு உள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், இளைஞர்கள், பொது மக்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.
மேலும், அதிக எண்ணிக்கையில் சட்ட விரோத ‘பார்’கள் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, அனைத்து நகர நிர்வாகங்களுக்கும், அந்நாட்டு துணை ஜனாதிபதி ரிகாதி கச்சகுவா உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சட்ட விரோத மது விற்பனையால் இளைஞர்கள் கொல்லப்படுவதை, என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இது போன்ற தேவையற்ற உயிரிழப்புகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
புதிய மதுக்கடைகள், பார்களை அமைக்க உரிமம் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement