கீரப்பாக்கம் கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பரத்(19). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சக நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பரத் கீரப்பாக்கம் கல்குவாரியில் மது அருந்தியுள்ளார். பின்பு 4 பேரும் 300 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் குளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பரத் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், கடும் போராட்டத்திற்கு பின்பு பரத்தின் உடலை கைப்பற்றின ர். இதைத்தொடர்ந்து போலீசார் பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.